திருமண வரவேற்பு நிகழ்ச்சியை படம் பிடிக்க டிவி நிறுவனங்களிடம் ரூ.3.5 கோடி கேட்ட சோயப்

posted in: உலகம் | 0

லாகூர்: தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய பாகிஸ்தான் டிவி நிறுவனங்களிடம் ரூ. 3.5 கோடி கேட்டுள்ளார் சோயப் மாலிக். ஆனால் எந்த டிவியும் அதை ஏற்கவில்லையாம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், சோயப் மாலிக் மற்றும் அவரது மனைவி சானியா மிர்ஸா ஆகியோர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். நேற்று அவர்களது திருமண வரவேற்பு சோயப்பின் சொந்த ஊரான சியால்கோட்டில் நடந்தது.

இந்த, நிகழ்ச்சியை படமாக்கிக் கொள்ள ஒரு ரேட் வைத்திருந்தார் சோயப். யார் ரூ. 3.5 கோடி தருகிறார்களோ அவர்களே வரவேற்பு நிகழ்ச்சியை முழுமையாக படமாக்கிக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் எந்த டிவி நிறுவனமும் இதை ஏற்கவில்லையாம்.

இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு எந்த டிவி நிறுவனமும் படம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு தனது பிரைவேட் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டாராம் சோயப்.

இதுகுறித்து துனியா நியூஸ் டிவி நிறுவனத்தினர் கூறுகையில், வரவேற்பு நிகழ்ச்சிக்கும், ஏப்ரல்27ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க வருமாறு எங்களுக்கு அழைப்பு அனுப்ப்ப்பட்டிருந்த்து. ஆனால் கூடவே ரூ. 10,000 பணம் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தனர். சோயப்பின் உறவினர் ஒருவரிடம் இதைக் கட்ட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது என்றனர்.

இதற்கிடையே, சோனியா, சோயப் தங்கியிருக்கும் லாகூர் பியர்ல் கான்டினென்டல் ஹோட்டலில் பத்திரிக்கையாளர் கூட்டம் அலை மோதுகிறது. சானியாவை படம் பிடிக்க அடிதடி நடக்காத குறையாக கேமராவும், கையுமாக பத்திரிக்கையாளர்கள் திரிகின்றனர்.

இதனால் சோயப்பின் மைத்துனர் இம்ரான் ஜாபர் அதிருப்தி அடைந்துள்ளார். குறிப்பாக சானியாவும், அவரது தாயார் நசீமாவும் 2 நாட்களுக்கு முன்பு கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்டனர். கீழே விழாத குறையாக அவர்கள் நெருக்கி அடிக்கப்பட்டதால் சானியாவுக்கு கண்களில் நீர் திரண்டு விட்டதாம்.

இதை சுட்டிக் காட்டி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இம்ரான், எங்களைத் தனியாக விடுங்கள். எங்களது அறையில் கொண்டு வந்து கேமராவை வைக்க முயலுகிறீர்கள். இது சரியல்ல என்றார் கோபமாக.

வரவேற்பு நிகழ்ச்சியில் மகா குழப்பம்

இந்த நிலையில், சியால்கோட்டில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாத பலரும் வந்து குவிந்ததால், ஒரே குழப்பமாகி விட்டது. பெரும் கூட்டம் கூடியதாலும், போதிய பாதுகாப்பு இல்லாத்தாலும், அதிருப்தி அடைந்த சானியாவும், சோயப்பும் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.

சியால்கோட்டில் உள்ள ஹாக்கி மைதானத்தில்தான் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைதானமே நிரம்பி வழிந்த்து கூடிய கூட்டத்தால். பெரும்பாலானவர்கள் கூப்பிடாமலேயே வந்தவர்களாம்.

இது போதாதென்று மின்சார சேமிப்பு என்று உள்ளூர் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளைப் போட்டதாலும் சோயப் குடும்பத்தினர் பெரும் கடுப்பாகி விட்டனர்.
Read: In English
சானியா குடும்பத்தினர் இந்தக் குழப்பமான ஏற்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே கிளம்பி லாகூர் போய் ஹோட்டலில் தங்கி விட்டனராம். சிறிது நேரத்திலேயே சானியாவும், சோயப்பும் கூட எழுந்து போய் விட்டனர்.

இந்த கூத்தில் சானியாவின் தம்பி அட்ன்ன் சிக்கிக் கொண்டார். அவரை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதிக்காமல் காவலர்கள் வெளியிலேயே நிறுத்தியதால் சானியா குடும்பத்தினர் டென்ஷனாகி விட்டனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *