நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : கபில் சிபல் தகவல்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_10808527470புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

போலி பல்கலைக் கழகங் களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று லோக்சபாவில் கூறியதாவது: அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.,) விதிமுறைகளின்படிதான் நாட்டிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறாமல் 201 கல்வி நிறுவனங்கள் நாடு முழுவதும் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில் மகாராஷ்டிராவில் 74, டில்லியில் 24, கர்நாடகாவில் 22, தமிழகத்தில் 19, உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 13 நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒழுங்குமுறை நடைமுறைகளை மீறி செயல்படுகின்றன.

இவற்றில், ஐதராபாத்தில் உள்ள ஐ.எஸ்.பி., டில்லி, குர்கான் மற்றும் சண்டிகரில் இயங்கி வரும் ஐ.சி.எப்.ஏ.ஐ., பிசினஸ் ஸ்கூல், டில்லியில் உள்ள ஐ.ஐ.பி.எம்., கே.ஆர்.மங்களம் குளோபல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட், குர்கானிலுள்ள ஜே.கே.பிசினஸ் ஸ்கூல், பெங்களூரிலுள்ள எம்.பி.பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பாரதிய வித்யா பவன், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.

பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) நடத்திய ஆய்வில் 21 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கிது தெரியவந்திருக்கிறது கண்டறிந்துள்ளது. இவற்றில் எட்டு பல்கலைகள் உ.பி.,யிலும், ஏழு டில்லியிலும் உள்ளன. யு.ஜி.சி.,மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அமைப்புகள் இவை குறித்து எச்சரிக்கை அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றன. இதுபோன்ற போலி கல்வி நிறுவனங்களைத் தடுப்பதற்காக, புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். சட்ட நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் போலி நிறுவனங்களுக்குத் தகுந்த தண்டனை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *