நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் அய்மி உலகிலேயே கவர்ச்சிகரமான வீராங்கனையாக தேர்வு

posted in: உலகம் | 0

28-aimee200ஆக்லாந்து: நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அய்மி வாட்கின்ஸ், உலகிலேயே கவர்ச்சிகரமான வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மொத்தம் 64 வீராங்கனைகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அய்மி. இந்தப் பட்டியலில், அமெரிக்க வீராங்கனை லின்ட்சே வான், ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை ஸ்டெபானி ரைஸ், செக் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை நிக்கோல் வடிஸ்லோவா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

யாஹூ எக்ஸ்ட்ரா இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது. இதுகுறித்து அய்மி கூறுகையில், இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எப்போதுமே என்னை கவர்ச்சிகரமான வீராங்கனையாக நான் நினைத்துப் பார்த்ததில்லை. இது நிச்சயம் எனக்கு புதிய விஷயம் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த செய்தி குறித்து அம்மாதான் எனக்குத் தெரிவித்தார். அவருக்கும் கூட இது ஆச்சரியம்தான் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *