நியூயார்க்: டொயோட்டா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான லெக்ஸஸ் ஜிஎக்ஸ, 460 மாடல் கார்கள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வகைக் கார்களில் பாதுகாப்புக் குறைபாடு அதிகம் உள்ளதாகவும், யாரும் இதை வாங்க வேண்டாம் என்றும் அமெரிக்காவின் புகழ்பெற்ற மோட்டார் வாகன வார இதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை செய்துள்ளது டொயோட்டா.
இதுகுறித்து டொயோட்டா நிறுவனம் கூறுகையில், “லெக்ஸஸ் ரகக் கார்கள் அதி உயர் பாதுகாப்புச் சோதனைகளில் தேர்ச்சி பெற்ற மாடல். ஆனால் இப்போது சில புகார் [^]கள் வந்துள்ளன. வாடிக்கையாளரின் பாதுகாப்புத் தொடர்பாக வந்துள்ள அந்தப் புகார்களை அலட்சியம் செய்ய விரும்பவில்லை” என்று கூறியுள்ளது.
லெக்ஸஸ் விற்பனையை நிறுத்தும்படி தங்களின் அனைத்து டீலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது டொயோட்டா.
Leave a Reply