பிளஸ் 2 இயற்பியலில் 262 மாணவர்களுக்கு மறு தேர்வு: தேர்வுத்துறை முடிவு

posted in: கல்வி | 0

tblfpnnews_19669306279சென்னை : ‘பிளஸ் 2 இயற்பியல் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 262 மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி மறு தேர்வு நடக்கும்’ என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித் துள்ளார்.

இதையடுத்து, விடைத் தாள்கள் காணாமல் போன விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மாதம் 8ம் தேதி முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்களில், 262 மாணவர்களின் இயற்பியல் பாட விடைத்தாள்கள் அடங்கிய கட்டு, காணாமல் போனது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விடைத்தாள்கள் கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இயற்பியல் பாடத்தில் மறுதேர்வு நடக்கும். அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469874 முதல் 469951 வரை (469879 தவிர) இடம்பெற்றுள்ள மாணவர்கள், தண்டலைப் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 469968 முதல் 470052 (470045 தவிர) வரை இடம்பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதிவெண் 470272 முதல் 470375 வரை (470274, 470308, 470342 எண்கள் தவிர்த்து) இடம்பெற்றுள்ள மாணவர்களும், இந்த மறுதேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுத வேண்டும்.

மறுதேர்வு குறித்து மேலும் விவரம் தேவைப்பட்டால், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் மாயமான விவகாரம் குறித்து, சட்டசபையில் நேற்று பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘விடைத்தாள்கள் கிடைக்குமா என ஓரிரு நாட்கள் காத்திருந்து, அதன் பிறகும் கிடைக்காவிட்டால், மறுதேர்வு நடத்தப்படும்’ என, பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த நிலையில், நேற்றே மறுதேர்வு தேதியை தேர்வுத்துறை அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம் குறித்த விசாரணையை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *