வாஷிங்டன்: புதிய 100 டாலர் கரன்சியை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இது, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கருவூலத் துறை, பெடரல் ரிசர்வ் போர்டு மற்றும் அமெரிக்க அரசின் ரகசிய சேவைத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் நேற்று புதிய 100 டாலரை வெளியிட்டனர். இந்த கரன்சி, சட்டப்படி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். 2011 பிப்ரவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. முந்தைய கரன்சிகளிலிருந்து, பெஞ்சமின் பிராங்க்ளின் படத்தின் ‘வாட்டர் மார்க்’, பாதுகாப்பு நூலிழை மற்றும் 100 என்ற எண்ணில் ஏற்படும் நிற மாற்றங்கள் ஆகிய மூன்று அமைப்புகளும் இந்த கரன்சியிலும் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கள்ள நோட்டு அச்சடிப்பதிலிருந்து தவிர்ப்பதற்காக இந்தக் கரன்சி, நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கரன்சி நடைமுறைக்கு வந்த பின்பும், பழைய வடிவமைப்பில் உள்ள 100 டாலர் நடைமுறையில் இருக்கும்.
Leave a Reply