புல்லட் புரூப் கார்: இறக்குமதிக்கு அனுமதி

6527173புதுடில்லி: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, புல்லட் புரூப் வசதி கொண்ட பி.எம்.டபிள்யூ., காரை இறக்குமதி செய்து, டில்லி பகுதியில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போதைய பிரபலமான தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு மிகவும் சிக்கலாக உள்ளது. இதன் காரணமாக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம், புல்லட் புரூப் வசதி கொண்ட கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த காரை இறக்குமதி செய்ய, மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்படி தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, மத்திய அரசிடம் அனுமதி கேட்டார்.

இதையடுத்து, மத்திய வர்த்தக அமைச்கத்தின் கீழ் வரும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குனரகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்ற பிறகு, பிர்லாவுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பிர்லா வசம் உள்ள ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் 7 சீரிஸ் மாடலில் வெளி வரும் 760 எல்ஐ காரை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டில்லி பகுதியில், பிர்லாவும் அவரது குடும்பத்தினரும் இந்த காரை பயன்படுத்தி கொள்ளலாம்.

புல்லட் புரூப் கார் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், வரி கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். எனவே, காரின் விலை எவ்வளவு என்பதை இறுதி செய்து விட முடியாது. பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் 7 சீரிஸ் கார்களின் விலை 80 லட்சம் ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாய் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *