புதுடில்லி: அரியானாவின் மானேசர் பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி நிறுவன தொழிற்சாலைக்கு, பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு வினியோகத்தை, ‘கெய்ல்’ இந்தியா நிறுவனம் துவக்கியது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: அரியானாவின், குர்கான் மாவட்டம் மானேசர் நகரில், மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு, ‘கெய்ல்’ இந்தியா நிறுவனத்தின் செயின்சா மற்றும் அரியானாவின் ஜஜ்ஜார் இடையேயான பைப்லைன் திட்டம் மூலம், இயற்கை எரிவாயு வினியோகம் கடந்த 30ம் தேதி துவங்கியது.
இதை, ‘கெய்ல்’ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் பி.சி.திரிபாதி துவக்கி வைத்தார். ஒரு நாளைக்கு 3.5 கோடி கனமீட்டர் திறன் கொண்ட, செயின்சா மற்றும் ஜஜ்ஜார் பைப்லைன், 450 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் பெறும் முதல் நிறுவனம் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட். கடந்தாண்டு மார்ச் மாதம், ‘கெய்ல்’ மற்றும் மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இடையே எரிவாயு விற்பனை ஒப்பந்தம் கையெழுத்தானது. பத்தாண்டுகளுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தேவை ஏற்பட்டால், அதன் பின் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது
Leave a Reply