மின்வெட்டு குறித்து பொதுநல மனு: அரசுக்கு அனுப்பி வைக்க ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

tblkutramnews_93747675419சென்னை: ‘தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை, அரசு பரிசீலிக்கும்’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். மின்கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு நாள் தவறினால் கூட, உடனே மின் இணைப்பை துண்டிக்கின்றனர். கட்டணத்தை வசூலித்த பின், மின் இணைப் பை தருகின்றனர்.

இடைவெளியின்றி மின்சாரத்தை வழங்க தவறினால், ஒவ்வொரு நாளுக் கும் நுகர்வோருக்கு நஷ்டஈட்டை மின் வாரியம் தரவேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்சார வினியோகத்தை தடை செய்வதற்கு பதிலாக, அரசு விழாக்களில் அலங்கார விளக்குகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, மின்வெட்டு பிரச்னையை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிலவும் மின்வெட்டு பிரச்னை குறித்து எங்கள் கவனத்திற்கு மனுதாரர் கொண்டு வந்துள் ளார். மாவட்டங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும், மின்உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மின்சாரம் வீணாவதை தடுக்கவும் சில பரிந்துரைகளை கூறியுள்ளார். இது குறித்து அரசுக்கு மனுதாரர் மனு அனுப்பலாம். அதை அரசு, ஆழ்ந்து ஆராயும் என எதிர்பார்க்கிறோம். இந்த மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *