டெல்லி: பங்குச் சந்தை சார்ந்த யூலிப் திட்டங்களை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளியிடக்கூடாது என செபி விதித்த தடைக்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தடைவிதிக்கப்பட்ட 14 நிறுவனங்களும் அதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், தொடர்ந்து இத்தகைய பாலிசிகளை விற்கலாம் என்றும் ஐஆர்டிஏ அறிவித்துள்ளது.
செபியின் இந்த தடை உத்தரவால், வாடிக்கையாளர்கள் குழம்பியிருப்பதாகவும், பாலிஸியின் முதிர்வுக் காலத்துக்கு முன்பே அதை திரும்பப் பெற முயல்வதாகவும் ஐஆர்டிஏ குற்றம்சாட்டியுள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் ஐஆர்டிஏ உள்ளதென்றும், இதில் செபி தேவையின்றி தலையிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செபியின் முன் அனுமதி பெறாமல் பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபட்டதாலேயே, இந்த தடையை செபி விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply