வங்கி இணையதளத்தில் குளறுபடியா: பணம் இழந்தனர் துபாய் இந்தியர்கள்

posted in: உலகம் | 0

துபாய்:இணையதள மோசடி மூலம் வங்கி கணக்கிலிருந்த, பணத்தை இழந்த இந்தியர்கள், தங்கள் பணத்தை திருப்பி அளிக்குமாறு, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர், கடந்த டிசம்பர் மாதம், பணமோசடிக்கு ஆளாகி உள்ளனர்.

இவர்களின் வங்கி கணக்கிலிருந்த பணம், தொலைபேசி கட்டணங்கள் செலுத்துதல் உட்பட பல வழிகளில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் பிரவீன் பாக்லிவால்(51). இவரது வங்கி கணக்கிலிருந்து, கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் இரண்டு வாரங்களில், 16.80 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 135 தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணம் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணம் என்ற ரீதியிலும் மோசடி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவை சேர்ந்த மற்றொருவர் அப்துல் சவாத் (33). இவரது வங்கி கணக்கிலிருந்தும் பெரியளவிலான தொகை, கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மோசடி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சவாத் கூறுகையில்,’ சந்தேகப்படும் வகையிலான எந்த இ-மெயிலுக்கும் பதில் அளிக்கவில்லை’ என்றார்.

இத்தகைய மோசடியால் பாதிக்கப்பட்ட மகமூத் முகமது என்பவர், தனக்கு வழங்கப்பட்ட வங்கி கணக்கு தகவலில் இருந்து 40 தொலைபேசி எண்களுக்கு போன் செய்து பார்த்த போது, அவற்றில் ஒன்று கூட, செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இவர், அபுதாபியில் உள்ள மாஷ்ரேக் வங்கி கிளையில், தான் இழந்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு, புகார் செய்தார்.இதுகுறித்து மாஷ்ரேக் வங்கி சார்பில் கூறுகையில்,’வங்கி கணக்கிலிருந்து பண மோசடி தொடர்பான முதல் புகார் வந்ததும், நாங்கள் எச்சரிக்கை அடைந்து, வங்கி கணக்கின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதில், வங்கியின் சார்பில் எவ்வித தவறும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய பொறுப்பு வங்கிக்கு இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *