புதுடில்லி : மிக விரைவில் ஆப்பிரிக்கா கண்டத்திலும் தனது தொலைத் தொடர்பு சேவையை விரிவுபடுத்த பார்தி ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
மொத்த 15 நாடுகளில் தனது தொலைத் தொடர்பை விரிவுபடுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதும், முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது. தற்போது ஆப்பிரிக்காவில் குவைத்தை சேர்ந்த ஜைன் நிறுவனத்தின் சேவையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு 42 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் உள்ளூர் கட்டணத்திலேயே சர்வதேச ரோமிங் சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply