காஞ்சிபுரம்:முன்பு தரமான கல்வி கற்க வெளிநாடு சென்று படிக்கும் நிலை இருந்தது. இன்று வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வருகின்றனர் என, துணை முதல் வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வாலாஜாபாத் அடுத்த வெங்குடி கிராமத்தில் அமிர்தம் அறக்கட்டளை கல்லூரி வளாகம் திறப்பு விழா நடந்தது. ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ‘ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் பிரச்னைகளை சட்டசபையில் எடுத்துரைப்பார்.சென்னை மேயராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந் தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தினர். அப்போது ஜி.கே.மூப்பனார் பேசும்போது, ‘நான் ஸ்டாலினை வாழ்த்துகிறேன். ஆனால், பாராட்ட மாட் டேன். அவரை பாராட்ட வேண் டும் என்றால் அவர் மாநகராட்சி கல்வித் தரத்தை உயர்த்த வேண் டும்’ என்றார். அந்த உரை எனது செவிகளில் இன்றும் ரீங்காரமிடுகிறது.
முன்பு ஒரு பையன் கெட் டுப் போக வேண்டும் என்றால் மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பர். அந்த நிலையை மாற்ற உறுதி எடுத் தோம். ஓராண்டில் மாநகராட்சிப் பள்ளி கல்வித் தரத்தை, தனியார் பள்ளியை விட சிறப்பாக உயர்த்தினோம். அதன்பின் நடந்த விழாவில், ஜி.கே.மூப்பனார் இப்போது நான் ஸ்டாலினை பாராட்டுகிறேன் என்றார்.தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்துகிறது. முன்பு தரமான கல்வி கற்க வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் நிலை இருந் தது. தற்போது வெளிநாட்டினர் கல்வி கற்க இந்தியா வருகின்றனர். குறிப்பாக தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது’ என்றார்.
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசும்போது,’துணை முதல்வர் கூட்டணிக் கட்சி விழாக்களிலும் கலந்து கொள்கிறார். இது, வலுவான கூட்டணிக்கு உறுதி சேர்க்கும். ஏழை, எளிய மக்களுக்கும் சீருடை சட்டம் கொண்டு வந்தவர் காமராஜர். ஐக்கிய முற் போக்கு கூட் டணி ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வித் தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் கல்விக்கு மட்டும் 45 ஆயிரத்து 711 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் கூடுதல். தொழிற் கல்விக்கு மட்டும் 34 ஆயிரத்து 711 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் கூடுதல். உயர்கல்விக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் கூடுதல். 11வது ஐந்தாண்டு திட்டத் தின் கீழ் 11 புதிய மத்திய பல்கலைக்கழகங்களை துவக்க 155 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது. இது தவிர ஏழு புதிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 10 தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்கள் துவக்கப்பட உள்ளன.தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க துணை முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்’ என்றார்.
Leave a Reply