அண்ணா பல்கலை.யில் எம்.எஸ்சி. படிப்பு: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

posted in: கல்வி | 0

சென்னை, மே 27: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு எம்.எஸ்சி., படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பது:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்சி., (கணினி அறிவியல்), எம்.எஸ்சி., (தகவல் தொழில்நுட்பம்), எம்.எஸ்சி., (மின்னணு ஊடகம்) ஆகிய மூன்று 5 ஆண்டு ஒருங்கிணைந்த சுயநிதி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்புகளில் 2010-11-ம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் தேர்வு மையத்தில் தற்போது வழங்கப்படுகின்றன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.600, (எஸ்.சி., எஸ்.சி., (அருந்ததியர்), எஸ்.டி. ஆகியோருக்கு ரூ.300). தவிர, விண்ணப்பங்களை www.ann​auniv.edu என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கட்டணத்தை “இயக்குநர் (மாணவர் சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி. மூலம் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 2-ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே சொன்ன படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவரம் உள்ளிட்டவற்றைத் தெரிந்துக் கொள்ள, மேலே குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிடலாம். தவிர, 044-22358265 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *