வாஷிங்டன்:அடுத்த மாதம் 4ம்தேதிமுதல் அமெரிக்க விசா கட்டணம் உயர்த்தப்படுகிறது.
விசா வேண்டி விண்ணப் பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஆராய்வது உள்ளிட்ட நடை முறை செலவு அதிகரித்துவிட்ட காரணமாக, விசா கட்டணத்தை உயர்த்தப் போவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் படிப்பதற்கும்,சுற்றுலா,வர்த்தகம் தொடர்பாக செல்வதற்கும் விசாவுக்கு 6,300 ரூபாயும்( 140 டாலர்) கலைநிகழ்ச்சி நடத்தவும், தற்காலிக வேலை பார்ப்பதற்கும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்வதற்கும், மதம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வதற்குமான விசாவுக்கு 6,750 ரூபாய் ( 150 டாலர் )இனி கட்டணமாக வசூலிக்கப்படும். வரும் 4ம் தேதி முதல் இந்த விசா கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
Leave a Reply