சிவகங்கை:பட்டதாரி ஆசிரியர் பணிக்கானசான்றிதழ் சரிபார்ப்பில், போலி சான்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.
பள்ளி கல்வி துறையில் 6,332 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். இதில், அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள 31 ஆயிரத்து170 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று முதல் மே15வரை,அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது.
சரிபார்ப்பு பணி குறித்து முதன்மை,மாவட்ட கல்வி அதிகாரிகளுடன், ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் சங்கர்,’வீடியோ கான்பிரன்சிங்’மூலம்,ஆலோசனை நடத்தினார். அவர் கூறிய தாவது:கவுன்சிலிங் மையத்தில்,மாற்று திறனாளிகளின் வசதிக்காக, சாய்தளம் இருக்க வேண்டும்.பெற்றோருக்கு இருக்கை வசதி செய்ய வேண்டும். தேர்வு வாரிய விதிகளின்படி சான்று சரியாக இருந்தால், விண்ணப்பத்தில் ‘ஏ-1’ (தகுதி),தகுதி இல்லாவிடில் ‘பி-2’ என, குறிக்க வேண்டும்.
இதில் ஆள்மாறட்டம் நடக்க வாய்ப்பு உண்டு. புதிய மாவட்டங்களான திருப்பூர், அரிய லூரில் பழைய மாவட்ட முகவரி இருந்தால், அச்சான்றுகளை சரிபார்க்கலாம்.சில பல்கலைகளில் போலி பி.எட்., சான்றிதழ் வழங்கப்பட்டதாக, முன்னர் தகவல் பரவியது. இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும், என அறிவுறுத்தினார்.
Leave a Reply