வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின்
கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹலேவை ஆதரிப்பதாக, குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இருவர் அறிவித்துள்ளனர்.
பஞ்சாபைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான “நம்ரதா நிக்கி ரவோதவா ஹலே’, அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியைச் சேர்ந்த இவரை, அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்களான சாரா பாலின், மிட் ரோம்னே இருவரும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.மிட் ரோம்னே விடுத்துள்ள அறிக்கையில், “நிக்கியை என் நண்பர் என்று அழைப்பதிலும் கவர்னருக்கான தேர்தலில் நிற்கும் அவருக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்வதிலும் நான் பெருமிதம் அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.கவர்னர் தேர்தலில், நிக்கி வெற்றி பெற்றுவிட்டால், பாபி ஜிண்டாலை அடுத்து அமெரிக்க மாகாணத்தின் கவர்னராகப் பதவியேற்கும் இரண்டாவது இந்தியர், முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமைகளை அவர் அடைவார்.
Leave a Reply