உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில்

posted in: கல்வி | 0

உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் படிப்பு சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2003ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உருவானது.

பிறகு 2007ம் ஆண்டு முதல் யு.ஜி.சி. பிரிவு 3ன் கீழ் பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டது. Nஅஅஇ தரக்கட்டுப் பாட்டால் ஆதரம் ஐந்து வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் நிறுவனர் அ.இ.சண்முகம், தலைவராகவும், அ.இ.கு.அருண்குமார், உபதலைவராகவும், முனைவர் M.ஓ.பத்மனாபன் துணை வேந்தராகவும் இருந்து மற்றும் பல பேராசிரியர்களின் உதவியுடன் நிர்வகித்து வருகின்றனர். வேலை வாய்ப்புத்திறன், சுயமாக வேலை உருவாக்கும் ஆற்றல் ஆகியவற்றை இந்திய மற்றும் பிற நாட்டு மாணவர்களுக்கும் போதித்து வருகிறது.

இப்பல்கலைக்கழகம் சிறந்த காற்றோட்டமான கல்வி பயிலும் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளும், நேர்த்தியான தொழிற்கூடங்களும் அதிநுட்பம் மற்றும் அதிநவீனமான கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொண்ட ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக விளங்குகிறது. இவ்வளவு தனிச்சிறப்புகள் வாய்ந்த டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல பெருமைவாய்ந்த வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, அயல்நாட்டு பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பாடத் திட்டங்களை, சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்த ஆயத்தம் செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

சந்தர்லேன்ட் பல்கலைக் கழகம், இங்கிலாந்துடன் கணினி மற்றும் கணினி தொழிற்சார்ந்த துறைகளில் பட்டமேற்படிப்புகள் இந்தியாவிலேயே தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தெற்காஸ்திரேலிய பல்கலைக்கழகம், அடிலெய்டுடன் நீர்வளம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை மேற் கொள்ளவும், டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு செமஸ்டர் பட்டப் படிப்பினை தெற்காஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிப்புப்புள்ளிகள் (Credit Basis) அடிப்படையில் தொடரவும் ஆவன செய்து அதனடிப்படையில் இரண்டு முறை ஆறு மாணவ, மாணவியர் பயனடைந் துள்ளனர். இங்கிலாந்திலுள்ள ஊல்வர்“ ஆம்ப்டன் பல்கலைக்கழகத்துடன் பட்ட மேற்படிப்புகள் (Twinning Programme) தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஸ்காட்லேன்டிலுள்ள பெர்த் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறையில் பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திற்காக தயார் நிலையிலுள்ளது. ஜப்பானின் இயோஷி நிறுவனத்தின் துணையுடன் உயிரியல் தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற அறிவியல் ஆகிய துறைகளில் அவர்களின் தொழிற்கூடங்களை உபயோகப்படுத்தி ஆராய்ச்சிகள் மேற் கொள்ளவும், பட்டப்படிப்புகள் துவங்கவும், இதுமட்டுமல்லாது டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜப்பான் சென்று பாடங்கள் நடத்தவும் ஜப்பானிய தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியாவில் சிறப்புரைகள் நிகழ்த்தவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓர் அங்கமான தாய்மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரியானது இலங்கை மெடிக்கல் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பட்டப்படிப்புகள் மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தவும் மலேசியாவிலுள்ள செலாங்கூர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் மலேசியா மலேக்காவிலுள்ள புத்ரா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் பல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஆராய்ச்சி மேற் கொள்ளவும் ஏற்பாடாகியுள்ளது. சைனாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் நமது மாணவர்களை பயிலச் செய்ய சைனாவைச் சேர்ந்த “”சிலிகான் (பீஜிங்) எக்கானமி மற்றும் தகவல் தொழில்நுட்ப&’&’ நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி, வரும் கல்வியாண்டில் நிறைவேற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *