வாஷிங்டன்:அமெரிக்காவில் வளர்ந்து குடியுரிமை பெற்றவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சதிகளில் ஈடுபடுவதை தடுக்க தற்போது அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது.
அதற்கான புதிய யுக்திகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்படும்.”உள்ளூரில் வளர்ந்த பயங்கரவாதிகள்’ இப்போது முதலில் கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியிருக்கிறார்.தேசிய பாதுகாப்பு குறித்த யுக்திகள் பற்றி நேற்று ஒரு அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டது. அதில், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென்ரோடிஸ் தெரிவித்த கருத்தில், “அமெரிக்காவுக்குள் பயங்கரவாதிகள் வளர்ந்து வாழ்ந்து, இருந்து சதி செய்வதை முதலில் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என்று ஒபாமா அரசு கருதுகிறது’ என்று கூறியுள்ளார்.
அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:அல்-குவைதா தாக்குதல் நடைமுறை மாறியிருக்கிறது. அவர்கள் தங்கிய மறைமுக இடங்களில் இருந்து, பயிற்சி பெற்ற நபர்கள் மூலம் இலக்குகளை நோக்கி தாக்குவது என்ற நிலையில் இருந்து சற்று மாறி, பயங்கரவாதத்தில் பயிற்சி பெற்றவர்களை இந்த மண்ணில் இருந்தே தேர்வு செய்து தாக்குதல் நடத்தும் யுக்தியை பின்பற்றுகின்றனர்.அம்மாதிரி தாக்குதல்களுக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களையும் பயன்படுத்துகின்றனர். அதில் முகமது அட்டா போன்ற பலரது செயல்கள் உதாரணமாகும். இம்மாதிரி செயலில் ஈடுபடுபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதால், சந்தேகங்களைத் தாண்டி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆகவே நமது நட்பு நாடுகள் அல்-குவைதா சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை சந்திக்கும் அணுகுமுறை தவிர, இந்த விஷயத்தில் வெவ் வேறு நாடுகளுக்கு விதவிதமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவும் குறிப்பாக அமெரிக்க மண்ணில் பயங்கரவாத ஆதரவுச் செயல்கள் தீவிரமாகாமல், உள்ளூர் அளவில் பாதுகாப்பு நடைமுறைக்கான புதிய யுக்தி வகுக்கப்படும்.இவ்வாறு ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறினார்.தேசிய அளவிலும் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கான தனி அணுகுமுறை மேற்கொள்ளவும் அமெரிக்க அரசால் திட்டமிட்டப் பட்டிருக்கிறது.
Leave a Reply