சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருளில் பருப்பு வகைகளின் விலைகள் படிப்படியாக குறைந்தாலும், எண்ணெய் வகைகளின் விலை, ‘கிடுகிடு’வென உயர்ந்து வருவது, மக்களை கவலையடைய வைத்துள் ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களான துவரம்பருப்பு கிலோ 100 ரூபாய், சர்க்கரை கிலோ 40 ரூபாய் என, விலை எப்போதுமில் லாத வகையில் உயர்ந்ததால், மக்கள் பெரிதும் திண்டாடினர். தற்போது, பருப்பு, சர்க்கரை விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் முதல் ரக துவரம்பருப்பு (100 கிலோ) 7,100லிருந்து, தற்போது 6,100 ரூபாயாகவும், இரண்டாம் ரக துவரம் பருப்பு 6,800 லிருந்து, 6,400 ரூபாயாகவும் குறைந் துள்ளது. சில்லரையில் முதல் ரகம் 69, இரண்டாம் ரகம் 67 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. உளுந்தம் பருப்பு (100 கிலோ) 7,500 லிருந்து, 7,100 ரூபாயாகவும், பர்மா உளுந்து 7,000 லிருந்து 6,600 ரூபாயாகவும் குறைந்துள்ளது. பாசிப் பருப்பு விலை (100 கிலோ) 9,500 லிருந்து 9,000 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரையில் 93 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடலைப் பருப்பு (50 கிலோ)முதல் ரகம் 1,600 லிருந்து, 1,450 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் (100 கிலோ) 2,800லிருந்து, 2,600 ரூபாயாகவும் குறைந்துள் ளது.
கடலைப் பருப்பு முதல் ரகம் 31, இரண்டாம் ரகம் 29 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. விளைச்சல் அதிகரிப்பாலும், பல்வேறு பருப்பு வகைகள் இறக்குமதி அதிகரிப்பாலும் பருப்பு விலை குறைந்து வருகிறது.
குறையுது சர்க்கரை: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு தடை மற்றும் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதித்ததாலும், நாட்டில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், சர்க்கரை விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் 100 கிலோ மூட்டை 3,000லிருந்து, 2,870 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரையில் கிலோ 32லிருந்து 30 ரூபாயாக குறைந்துள்ளது.
ஆயில் விலை கிடுகிடு: இந்தோனேசியா, மலேசியாவிலிருந்து இறக்குமதி குறைவால், சமையலுக்குத் தேவையான பாமாயில் 15 கிலோ டின் 585லிருந்து 630 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லரையில் 39க்கு விற்ற பாமாயில், 42 ரூபாய்க்கு விற்கிறது.
சன்பிளவர் ஆயில் 15 கிலோ டின் 705 லிருந்து 735 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில்லரையில் 47லிருந்து, 40 ரூபாயாக விற்கப்படுகிறது. கடலை எண்ணெய் 1,080லிருந்து 1,110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிலோ 72லிருந்து 74 ரூபாயாக உயர்ந்துள்ளது. அக்மார்க் நல்லெண்ணெய் கிலோ 105லிருந்து 110 ரூபாயாகவும், சாதாரண ரகம் 60லிருந்து 65 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வெல்லமும் உயர்ந்தது: சேலம் வெல்லம் கிலோ 30லிருந்து 34 ரூபாயாகவும், வேலூர் வெல்லம் 34லிருந்து 38 ரூபாயாகவும், அச்சு வெல்லம் 40லிருந்து 44 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கோவில் திருவிழாக் காலம் என்பதால் வெல்லத்தின் விலை உயர்ந்துள்ளது.
‘விலைகள் விரைவில் குறைய வாய்ப்புள்ளது’ என, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறினார். பருப்பு வகைகள் குறைந்தாலும், எண்ணெய் விலை அதிகரித்து வருவது, நடுத்தர மக்களை கவலையடைய வைத்துள்ளது.
Leave a Reply