எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை: 16 வயது பள்ளி மாணவன்

posted in: மற்றவை | 0

fe33f981-6893-469f-b874-c76f9b75c068_s_secvpfஉலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை படைத்துள்ளான். சாதனைபடைத்த அந்த சிறுவனின் பெயர் அர்ஜூன் வாஜ்பாய்.

16 வயதாகிறது. டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியை சேர்ந் தவன். அவன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உயரம் 8,848 மீட்டர் ஆகும்.

இதன் மூலம் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன் என்ற சாதனையை அவன் படைத்தான். நேற்று காலை 6.30 மணிக்கு அர்ஜூன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறதொடங்கினான். பத்திரமாகவும், வெற்றிகரமாகவும் ஏறி அவன் இந்த சாதனையை புரிந்தான். நேபாளம் பகுதியில் இருந்து ஏறி அவன் இந்த சாதனையை நிகழ்த்தினான்.

இது குறித்து அவனது தாயார் பிரியா கூறியதாவது:-

எனது மகனின் பெருமையை எப்படி வார்த்தைகளால் சொல்வது என்றே தெரியவில்லை. வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய தகவல் கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். மகனின் சாதனையை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

அர்ஜூன் தன்னம்பிக்கை நிறைந்தவன். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புவதாக என்னிடம் தெரிவித்தபோது கவலைப்பட்டேன். தற்போது எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துவிட்டான். இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அர்ஜூனின் தந்தை சஞ்சீவ் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். அவர் கூறும்போது 16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது நம்ப முடியாதது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நல்ல முறையில் இருந்து இதை செயல்படுத்தி இருக்கிறான் என்றார்.

அர்ஜூன் வாஜ்பாய் ரியான் சர்வதேச பள்ளி மாணவன் ஆவான். அவனது வருகைக்காக தற்போது அவனது குடும்பம் காத்திருக்கிறது.

இதே போல அமெரிக்காவை சேர்ந்த 13 வயது சிறுவன் ஜோர்டன் ரோமிரோ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய வரலாறு படைத்தான்.

இதன் முலம் உலகில் குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவன் என்ற சாதனையை அவன் படைத்தான். இதற்கு முன்பு நேபாளத்தை சேர்ந்த ஹெர்பா தெம்பா என்ற 16 வயது சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதே சாதனையாக இருந்தது.

ஜோர்டன் ரோமிரோ கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிக்பியர் நகரத்தை சேர்ந்தவன். இவன் ஏறிய எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 29,035 அடி ஆகும். தீபெத் பகுதியில் இருந்து ஏறி அவன் இந்த சாதனையை படைத்தான்

எவரெஸ்ட் உச்சியை அடைந்தவுடன் அமெரிக்காவில் இருக்கும் தனது தாய் ஆன்னி ட்ரேக்குடன் சேட்டிலைட் டெலிபோனில் பேசினான். அப்போது அம்மா நான் உலகின் உச்சியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
1 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *