சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு,
16ம் தேதியன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், ஏர்-இந்தியா நிறுவன விமானங்களில் பயணம் செய்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏர்-இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்தபின், முதன் முறையாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களுக்கு, 50 ஆயிரத்து 308 பயணிகள், ஒரே நாளில் பயணம் செய்தது சாதனையாகும். ஏர்-இந்தியா மற்றும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில், உள்நாட்டு விமான நிலையங்களுக்கு 32 ஆயிரத்து 456 பயணிகளும், வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு 17 ஆயிரத்து 852 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மே மாதத்தில், பயணிகளின் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply