சென்னை : இந்தியன் வங்கி, வீட்டு, வாகனக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது. இதன்படி 5 வருடத்தில் திரும்பச் செலுத்தும், ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டியை 10.5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைத்துள்ளது.
இதே போல் ரூ.20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை உள்ள கடனுக்கான வட்டியை 11.5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வாகனக் கடனுக்கான நிலையான வட்டி விகிதம் 11 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் திருப்பி செலுத்தும் கடனுக்கான வட்டிவீதம் 11.25 விசதவீதத்தில் இருந்து, 10.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனக் கடனுக்கான வட்டி 13 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
Leave a Reply