கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

tblfpnnews_78331720830மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

எனவே, அணியில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் வரை விளம்பரங்களில் நடிப்பதற்கு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது உலக கோப்பை ‘டுவென்டி-20’ தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு வீரர்களின் விளம்பர மோகம் முக்கிய காரணம். இந்திய அணியில் அறிமுகமாகி சில போட்டிகளில் பிரகாசித்து விட்டால், சம்பந்தப்பட்ட வீரர்களை விளம்பர நிறுவனங்கள் மொய்க் கின்றன. பல்வேறு பொருட்களுக்கு விளம்பர ‘மாடலாக’ தோன்றும் இவர்கள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறி விடுகின்றனர். இதற்கு பின் இவர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் சுத்தமாக போய் விடுகிறது. அணியில் பெயரளவுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர். தற்போது ஐ.பி.எல்., மூலமாகவும் பெருமளவு சம்பாதிக் கின்றனர். வீரர்கள் நாட்டுக்காக விளை யாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும். இதற்கு பின் தான் விளம்பர படங்களில் நடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

யுவராஜுக்கு தேவை ‘பிரேக்’: அடிக்கடி காயத்தால் அவதிப்படும் யுவராஜ் சிங், தொடர்ந்து போட்டிகளில் சொதப்புகிறார். இவருக்கு நீண்ட ‘பிரேக்’ அளிப்பது தான் ஒரே தீர்வாக அமையும். இவரை போல படுமட்டமாக ஆடும் ரவிந்திர ஜடேஜா போன்றவர்களுக்கும் வாய்ப்பு மறுக்க வேண்டும்.

‘பார்ட்டிக்கு’ போகச் சொன்னது யார்? உலக கோப்பை தோல்விக்கு ஐ.பி.எல்., ‘பார்ட்டிகள்’ தான் காரணம் என்று கேப்டன் தோனி சொன்னார். உண்மையில் ஐ.பி.எல்., ‘பார்ட்டிகளில்’ கலந்து கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு வீரரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. நடனப் பெண்கள், உயர்ரக மதுபானம் என உல்லாசமாக பொழுதை போக்கவே வீரர்கள் பங்கேற்றனர். சச்சின் போன்ற ஒரு சிலர் மட்டுமே துணிச்சலாக கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பெங்களூரு வீரர் உத்தப்பா கூறுகையில்,”பார்ட்டிகளில் பங்கேற்பது தனிப்பட்ட வீரர்களின் விருப்பம். நான் 2 பார்ட்டியில் தான் கலந்து கொண்டேன்,”என்றார். வரும் ஐ.பி.எல்., தொடரில் ‘பார்ட்டிகளுக்கு’ தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முறை இந்த காரணத்தை தோனி சொல்லமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *