சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: மான்டேக் பரிந்துரை

posted in: மற்றவை | 0

27mansaluபுது தில்லி, மே 27: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா பரிந்துரைத்துள்ளார்.

÷இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதாரம் மீதான அபிப்ராயம் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

÷தற்போதைய சூழலில் சர்வதேச விலை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டியதைத் தவிர்க்க முடியாது.

÷சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? என்று கேட்டதற்கு, “”ஏழை மக்களுக்கு உதவ விரும்பினால், மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கலாமே?” என்றார்.

÷வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு நேரடியாக மானியம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இப்புதிய முறை உலகில் இதற்கு முன் வெறெங்கும் பின்பற்றப்படாததாக, முன்னோடி முயற்சியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மானியம் அளிப்பதில் நிலவும் முறைகேடுகள், மானியத்தொகையை வேறு பணிகளுக்கு திருப்பி விடுதல் உள்ளிட்டவை தடுக்கப்படும் என்றார்.

÷ஏற்கெனவே எரிபொருள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆராய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் தலைமையிலான உயர் நிலைக் குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு ஜூன் 7-ம் தேதி கூடி, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆராயும்.

÷பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுகட்டுவதற்கு உரிய வழி காண்பது மற்றும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்கு அளிக்கப்படும் மானியம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

÷பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, சர்வதேச விலைக்கேற்ற விற்பனை செய்யப்பட்டால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 6 உயரும்.

÷தற்போது மானிய விலையில் விற்பதால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு நாளொன்றுக்கு ரூ. 255 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இந்த நிதி ஆண்டு இறுதியில் இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டம் ரூ. 90,000 கோடியாகும்.

÷தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 6.07 குறைவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.38-ம் குறைவாகவும் விற்கப்படுகிறது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 19.74-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 254.37-ம் குறைவாக விற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *