ஐதராபாத்: ஆந்திர சிறை கைதிகளுக்கு வங்கி தொடர்பான கால்சென்டர் வேலை கொடுக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் உள்ள செர்லபள்ளி மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
தண்டனை பெற்ற இந்த கைதிகளில் பலர் சோப்பு, பினாயில், மரச்சாமான்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைத்துறை டி.ஜி.பி., கோபிநாத் ரெட்டி குறிப்பிடுகையில், ‘செர்லபள்ளி சிறையில், 200 முதல் 250 கைதிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முடித்துள்ளனர். தண்டனை பெற்ற இந்த கைதிகள், மற்ற படிக்காத கைதிகளுடன் சேர்ந்து சோப்பு, பினாயில், தச்சு வேலையை செய்து வருகின்றனர். படித்த இந்த கைதிகளுக்கு கால் சென்டர் வேலை அளிக்க, ‘ரேடியன்ட் இன்போ சிஸ்டம்’ என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. சிறை வளாகத்திலேயே வங்கி பணி தொடர்பான பி.பி.ஓ., பணிகளை செய்ய கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற பின் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்’ என்றார்.
Leave a Reply