தமிழகத்தில் பள்ளிக்கூடங்களின் நேரம் மாறுகிறது

posted in: கல்வி | 0

school_studentsசென்னையைப் போலவே, தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும், பள்ளிக்கூடங்களின் நேரத்தை மாற்றியமைப்பது குறித்த நடவடிக்கை களில் ஈடுபடுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி சுற்ற்றிக்கை அனுப்பியுள்ளார்


இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி துவங்கும் நேரம், சென்னை தவிர இதர மாவட்டங்களில் காலை 9.30 மணி என்றும், சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, காலை 8.30 மணி அல்லது 9 மணி அல்லது 9.30 மணி என மூன்று நிலைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே, இதர மாவட்டங்களிலும் பள்ளிகளின் அமைவிடம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாணவர்கள் ஒரே நேரத்தில் பள்ளிக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக, துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதிகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர இடர்பாடுகளின் அடிப்படையில், பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கலெக்டரின் ஆலோசனையைப் பெற்று, பள்ளி துவங்கும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்.

இது தொடர்பாக, மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி, அவர்களது கருத்தை முதன்மைக் கல்வி அலுவலர்கள் பெற வேண்டும். அதன்பின், மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், காலதாமதம் இன்றி உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று பெருமாள்சாமி கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *