தமிழகத்துக்கான எரிவாயு திட்டத்தில் சிறு நம்பிக்கை

posted in: மற்றவை | 0

large_6434தமிழக நகரங்களுக்கு எரிவாயு அளிக்கும் திட்டத்திற்கு பெட்ரோலிய அமைச்சகத்திடமிருந்து ஒப்புதலை பெற்றவுடன், காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்று, ரிலையன்ஸ் தெரிவித் துள்ளது.


இதன்மூலம் தமிழகத்திற்கு கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து எரிவாயு கிடைக்கும் என்பதில் சிறு அளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. இங்கு எரிவாயு கிடைக்கப்பெற்றபோது தமிழகத்திற்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து தூத்துக்குடி வரைக்கும் குழாய்கள் பதிக்கப்படும் என்று ஜோராக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதன்பிறகு நிலைமைகள் மாறின. இங்கு கிடைக்கும் எரிவாயு அனைத்தும் வடமாநிலங்களுக்கு மட்டும் பகிர்ந்து அளிக்கப்படவே, தமிழகத்துக்கான எரிவாயு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே எரிவாயு திட்டம் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது.இந்நிலையில், பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “தமிழகத்தின் எரிவாயு தேவை என்பது, 24 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு உள்ளது. ஆனால், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அளிக்கும் எரிவாயுவின் அளவோ, வெறும் மூன்று மில்லியன் கன மீட்டர் மட்டுமே.”எனவே, மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு எரிவாயு தொடர்பாக முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. இதற்கு பிரணாப் முகர்ஜி தலைவராக உள்ளார். எரிவாயு என்பது தேசிய சொத்து. அதில் தமிழகத்துக்கும் பங்கு உள்ளது. தமிழகத்துக்கு தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற பிரதமர் தலையிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த கடிதம் கிடைக்கப்பெற்றவுடன், ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட மத்திய அரசு, தமிழகத்துக்கான எரிவாயு வழங்குவது தாமதமாவது ஏன் என்றும், குழாய் கள் அமைக்கும் பணி கெய்ல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வியெழுப்பியது.

இதற்கு விளக்கமளித்த ரிலையன்ஸ் நிறுவனம், “குழாய்கள் மூலம் தமிழகத்துக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கு பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கிவிட்டது. ஆனால், தமிழகத்துக்குள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்த, நகரங்களுக்கு எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.”சிட்டி காஸ் சிஸ்டம் எனப்படும் இத்திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை எனில், தமிழகத்துக்கு எரிவாயு வழங்கும் திட்டம் பொருளாதார ரீதியில் நம்பிக்கை அளிப்பதாக இருக்காது. இருப்பினும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் சிட்டி காஸ் திட்டத்திற்கும் அனுமதி பெறும் பணி தீவிரமாக உள்ளது.”எப்படியும் அனுமதி கிடைத்துவிடும். அதன்பிறகு காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு குழாய்கள் பதிக் கும் திட்டம் ஆரம்பமாகி, 2012ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

“தமிழகத்தில் சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, வேலூர், ஆற்காடு, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, கடலூர், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், திருச்சி, நாகை, அத்திப்பட்டு, உடுமலைபேட்டை, புதுக்கோட்டை, நெல்லை ஆகிய ஊர்களில் எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. “காக்கிநாடாவிலிருந்து சென்னை வரையிலும் உள்ள 450 கி.மீ., தூரத்திற்கு 36 அங்குல விட்டம் கொண்ட குழாயும், சென்னையிலிருந்து தூத்துக்குடி வரைக்கும் 30 அங்குல விட்டம் கொண்ட குழாயும் பதிக்கப்படவுள்ளன.”குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்னை இருக்காது. நிலம் தேவையில்லை என்றாலும், ஒவ்வொரு இடங்களிலும் கம்ரெஷர் நிலையம் அமைப்பதற்கு நிலம் தேவைப்படும். அதுவும் மிகச்சிறு நிலப்பரப்பு மட்டுமே போதுமானது’ என்று ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் டி-6 என்ற பிளாக்கில் தான் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயு எடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் கனமீட்டர் அளவு மட்டுமே உற்பத்தி உள்ளது.இது ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு பங்கிடப்பட்டுவிட்டது. தவிர இன்னும் ஆறு மாதத்திற்குள் 85 மில்லியன் கன மீட்டராக உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது.அவ்வாறு அதிகரிக்கப்படும் எரிவாயுவையும் பங்கிட்டு அளிக் கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி இப்போது கைவசம் இருக்கும் எரிவாயு அனைத்தும் ஏற்கனவே பங்கிடப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு எங்கிருந்து எரிவாயு கிடைக்கும்?

மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டார உயர் அதிகாரி பதிலளிக்கும் போது, “இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ரிலையன்ஸ் நிறுவனம் தன் உற்பத்தியை 120 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகரிக்கப்படும் போது தமிழகத்துக்குண்டான பங்கீடு கிடைக்கும் நிலை ஏற்படும்’ என்று தெரிவித்தார்.இதையே ரிலையன்ஸ் நிறுவன உயரதிகாரியும் உறுதி செய்தார். மேலும் அந்த அதிகாரியிடம், “தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதுவும் தயக்கம் உள்ளதா’ என்று கேட்டபோது, “முன்பு தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது அதுபோல எதுவும் இல்லை’ என்று பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *