புதுடில்லி : “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு
பாதுகாப்பு படையை ஈடுபடுத்தும் போது, பொறுப்புடன் செயல் பட வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த எல்லை பாதுகாப்பு படையினருக்கான விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பில் எல்லை பாதுகாப்பு படையினரின் பணி பாராட்டத் தக்க வகையில் உள்ளது. இந்தியா, தனது அண்டை நாடுகளுடன் மிக நீண்ட எல்லையை கொண்டுள் ளது. இதை பாதுகாக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.வன்முறையை கட்டுப் படுத்துவதற்கு பாதுகாப்பு படையை ஈடுபடுத்தும் போது, பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். மத்திய அரசோ, மாநில அரசோ தான் இதற்கு பொறுப்பேற்க முடியும். தீங்கு எதுவும் ஏற்படுத்தாத மற்றும் ஆயுதம் இன்றி போராடுவோருக்கு எதிராக படைகளை ஈடுபடுத்த முடியாது. கடந்த 18 மாதங்களில், புனேயில் நடந்த குண்டு வெடிப்பை தவிர, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவில்லை.இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
Leave a Reply