கொழும்பு:இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ராணுவ கோர்ட்டில் தனக்கு எதிரான விசாரணையின் போது நேற்று நேரில் ஆஜராகவில்லை.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பொன்சேகாவுக்கு ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, ராணுவ பணியில் இருந்தபோது சட்ட விரோத ஆயுத பேரம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ராணுவ கோர்ட்டில் நடக்கிறது. நேற்றும் விசாரணை நடந்தது. ஆனால், சரத் பொன்சேகா கோர்ட்டில் ஆஜராகவில்லை. தற்போது அவர் எம்.பி.,யாக உள்ளதால், பார்லிமென்டுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்து. இதனால், வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து விளக்கம் அளிக்கும்படி பொன்சேகாவுக்கு ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பொன்சேகா வக்கீல் கூறுகையில்,’பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யாவிடம், கடிதம் வாயிலாக அனுமதி கோரப்பட்டது. பொன்சேகா மீதான வழக்கை விசாரிக்கும் ராணுவ கோர்ட்டுக்கு, முறையான அலுவலகம் எதுவும் இல்லை. இதனால், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நேரடியாக கோர்ட்டில் அனுமதி கேட்க முடியவில்லை’ என்றார்.
Leave a Reply