சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
நிபந்தனைகளுடன் தான் இந்தியாவின் சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு கூறியதை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து தனது எஞ்சிய காலத்தை சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் கழிப்பதற்காக அவர் மலேசியாவில் இருந்து நேற்று யாழ்ப்பாணம் கிளம்பிவிட்டார்.
இந் நிலையில் இன்று இது குறித்து சட்டசபையில் முதல்வர் கருணாநிதி கூறுகையில்,
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதியே மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் சிகிச்சையளிக்க உத்தரவிட்டது. அதில், கடும் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
தமிழக அரசுக்கு பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி வரவில்லை. அவர் தமிழகத்திற்கு சிகிச்சை பெற மறுப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
Leave a Reply