பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு நிறுத்தம்: சோனி நிறுவனம் அறிவிப்பு

8086011லண்டன்: தகவல்களை சேமிக்கும் கருவிகளுள் புகழ்பெற்ற ‘பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பு, அடுத்த ஆண்டில் நிறுத்தப்படுவதாக, சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள், ஆவணங்கள், படங்கள் போன்றவற்றை சேமிப்பதற்காக, ‘பிளாப்பி டிஸ்க்’ கண்டுபிடிக்கப்பட்டது. ஆலன் ஷுகர்ட் என்பவர் தலைமையிலான ஐ.பி.எம்., குழு ஒன்று, 1969ல், ‘பிளாப்பி டிஸ்க்’கை கண்டுபிடித்தது. இந்த முதல், ‘பிளாப்பி,’ எட்டு அங்குலம் சதுர வடிவம் உடையதாக இருந்தது. 1976ல், ஐந்தே கால் அங்குல சதுர வடிவில், ‘பிளாப்பி’ தயாரிக்கப்பட்டது. 1978ல், இந்த, ‘பிளாப்பி’யை, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டன. இதன் சேமிப்புத் திறன் 1.2 மெகாபைட். மூன்றரை அங்குல சதுர ‘பிளாப்பி,’ 1981ல் சோனி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் சேமிப்பு அளவு முதலில் 400 கிலோ பைட்டாகவும், பின் 720 கிலோ பைட்டாகவும் இருந்தது. அதன்பின், உயர் திறன் கொண்ட 1.44 மெகாபைட் ‘பிளாப்பி’ வந்தது.

கடந்த 1996ல் உலகம் முழுவதும் 500 கோடி, ‘பிளாப்பி’கள் விற்றன. 2009ல் ஜப்பானில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம், ‘பிளாப்பி’கள் விற்றன. இந்நிலையில், ‘சிடி’, ‘டிவிடி’, ஜிப், யு.எஸ்.பி., போன்ற பல்வேறு சேமிப்புக் கருவிகள் வந்துவிட்ட நிலையில், ‘பிளாப்பி’ பயன்பாடு படிப்படியாக மறைந்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல், ‘பிளாப்பி’ தயாரிப்பு நிறுத்தப்படுவதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை ‘பிளாப்பி’ தயாரித்து வந்த கடைசி நிறுவனம் சோனி மட்டும்தான். சோனியும் நிறுத்திவிட்டால், ‘பிளாப்பி’ பயன்பாடு, சுத்தமாக மறைந்து விடும். அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,”பிளாப்பி’க்கான தேவை இப்போது குறைந்து வருகிறது. ஐரோப்பாவுக்கான மூன்றரை அங்குல, ‘பிளாப்பி டிஸ்க்’ தயாரிப்பை சோனி நிறுவனம் 2009ல் நிறுத்தியது. ஐரோப்பாவுக்கான இறுதி விற்பனை 2010 மார்ச்சுடன் முடிந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *