டெல்லி: போட்டி ஐபிஎல் அமைப்பை உருவாக்கி, உலக கிரிக்கெட் வாரியங்கள், வீரர்கள், அணிகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்த லலித் மோடி முயல்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக மோடிக்கு ஒரு நோட்டீஸை கிரிக்கெட் வாரியம் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது…
ஐபிஎல் போட்டிகளைப் போல இங்கிலாந்தில் ஒரு போட்டி அமைப்பை உருவாக்கி கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயலுகிறார் மோடி. இதுதொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு இ மெயில் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கைல்ஸ் கிளார்க் அனுப்பியுள்ள அந்த மெயிலில், டெல்லியில் ஒருகூட்டத்தை நடத்தியுள்ளார் மோடி. அக்கூட்டத்தில் யார்க்ஷயர், லங்காஷயர், வார்விக்ஷயர் ஆகிய அணிகளின் பிரதிநிதிகள் மற்ற்றும் ஐஎம்ஜி அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ விலட்பிளட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அக்கூட்டத்தில் இங்கிலாந்தில் புதிதாக ஒரு டுவென்டி20 போட்டி அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அமைப்பை உருவாக்குவதற்காக மேற்கண்ட கவுண்டி அணிகளுக்கு பெரும் பணம் தரத் தயாராக இருப்பதாகவும் மோடி கூறியுள்ஏளார். மேலும், தற்போதுள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களையும், இங்கிலாந்தில் புதிதாக தொடங்கத் திட்டமிட்டுள்ள அமைப்புகளுக்கு மாறும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இந்திய ஐபிஎல் அணிகளில் விளையாடும் வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக திரும்ப வேண்டும். இங்கிலாந்தில் உருவாகும் புதிய அமைப்பில் இணைய வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார் மோடி. இதற்கு மறுக்கும் வீரர்கள், பணத்துக்காகத்தான் விளையாடுகிறாகள், அவர்களுக்கு தேச பக்தி கிடையாது என்று கூறவும் அவர் தயாராகி வருகிறார்.
இதுதவிர இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரைப் பயன்படுத்தி தனியாக டெஸ்ட் வமற்றும் ஒரு நாள் போட்டிகளை நடத்தவும் முன்பே அவர் திட்டமிட்டிருந்தார் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
Leave a Reply