தனது காம லீலையால் ஆந்திராவின் ஆளுநர் பதவியை இழந்த என்.டி. திவாரி தனக்கு மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றத்துக்கு பதில் மனு அளித்துள்ளார்.
ஆந்திரா மாநில கவர்னராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான 84 வயது என்.டி.திவாரி கவர்னர் மாளிகையில் `செக்ஸ்’ லீலையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பதவியை இழந்தார்.
அவருக்கு மேலும் ஒரு சோதனையாக ரோகித் சேகர் என்ற வாலிபர், திவாரி தனது தந்தை என்று அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் தன்னை திவாரியின் சட்டப்பூர்வமான மகனாக அறிவிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களுக்கு ஏன் மரபணு சோதனை நடத்தக் கூடாது என்பதற்கு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள அவர், தனக்கு மரபணு சோதனை நடத்துவது சட்ட விரோதம். மரபணு சோதனை நடத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply