மலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்!

posted in: உலகம் | 0

28-ananda-krishnan200கோலாலம்பூர்: மலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரு தமிழர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவில் 40 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் 2 தமிழர்களும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் அனந்த கிருஷ்ணன். இவரது சொத்து மதிப்பு ரூ.40,000 கோடியாகும். 72 வயதான இவர் மலேசியாவில் செல்போன் இணைப்பு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். உலகத்திலேயே உயரமான கட்டடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் டவர் உரிமையாளர்களில் இவரும் ஒருவர்.

இதுதவிர இவருக்குச் சொந்தமாக சாட்டிலைட் டி.வி.சேனல்களும் உள்ளன.

கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்ற இன்னொரு தமிழர் ஏ.கே.நாதன். 54 வயதான இவர் உலோக உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழிலில் முன்னணியில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *