சென்னை:’மதுரை மாநகராட்சி பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும்’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர்கள் அளித்த பதிலுரை:நன்மாறன் – மார்க்சிஸ்ட்: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு ஆவன செய்யுமா?அமைச்சர் தங்கம் தென்னரசு: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் காலியாகவுள்ள 48 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 14 உடற்கல்வி ஆசிரியர்கள் என மொத்தம் 62 பணியிடங்களை நிரப்ப உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நன்மாறன்: சென்ற ஆண்டும் இதே பதிலைத்தான் வழங்கினீர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்கம் தென்னரசு: மிக விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.நன்மாறன்: தமிழின் செம்மைத் தன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரிவதில்லை. மாணவர்கள் தமிழின் செம்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.தங்கம் தென்னரசு: தமிழ் செம்மொழியான வரலாறு குறித்து, பாடத்திட்டத்தில் சேர்க்க படநூல் குழுவிற்கு ஆலோசனை வழங்கப்படும்.
Leave a Reply