யற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் நிறுவனங்களுக்கு பாதிப்பு

9677655கொச்சி: இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் இயற்கை ரப்பர் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ரப்பர் இறக்குமதியும் சரிவடைந்துள்ளது.

இதனால் வாகன டயர்களுக்கான உற்பத்தி செலவினம் அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவை கடும் இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.அமெரிக்காவில் இயற்கை ரப்பர் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், இந்தியா உலக அளவில் ரப்பர் பயன்பாட்டில் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற ஆண்டில் நம் நாட்டில் ரப்பர் பயன்பாடு 9.31 லட்சம் டன்னாக இருந்தது. அவ்வாண்டில் ரப்பர் இறக்குமதி 1.71 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு ஆண்டில் நம் நாட்டில் 70,000 டன் இயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்படும் என ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 11,000 டன் ரப்பர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என மோட்டார் வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனர் ராஜீவ் புத்தராஜா தெரிவித்தார்.

இந்திய டயர் நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 80,000 டன் இயற்கை ரப்பர் தேவைப்படுகிறது. சென்ற ஆண்டில் ஒரு லட்சம் டன் இயற்கை ரப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் பற்றாக்குறை 85,000 டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *