ராகுல் காந்தி நாளை கொல்லம் வருகிறார் – பாதுகாப்பு தீவிரம்

posted in: அரசியல் | 0

09-rahul-gandhi2000கொல்லம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை கொல்லத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களை அதிகமாக சேர்த்து இளைஞர் காங்கிரசை ராகுல் காந்தி பலப்படுத்தி வருகிறார். இளைஞர் காங்கிரஸ் அமைப்பை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வலுவாக்கும் விதம் சுற்று பயணமும் மேற்கொண்டு வருகிறார்.

நாளை கேரள மாநிலத்தில் வயநாடு, காசர் கோடு, கொல்லம் ஆகிய 3 நகரங்களில் நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் பிரமுகர்களோடு ஆலோசனை நடத்துவதற்காக அவர் வருகிறார்.

காசர்கோடு, வயநாடு சென்றுவிட்டு கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் மதியம் 3 மணியளவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் அவர் பின்னர் கார்பரேசன் வங்கி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

ராகுல் காந்தி கொல்லம் வருகை திடீர் சுற்று பயணம் என்று கூறப்படுகிறது. ராகுல் வருகையை ஓட்டி கொல்லம் பகுதிகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பு சோதனைகளை முடுக்கி விட்டுள்ளது. கொல்லத்திற்கு ராகுல் திடீர் வருகையை ஓட்டி நடந்த சோதனையில்தான் இலங்கை தமிழர்கள் விடுதியில் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *