போபால் : மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, இந்தோனேஷியாவில் இருந்து 50,000 மெட்ரிக் டன் நிலக்கரியை மத்தியப் பிரதேசம் இறக்குமதி செய்கிறது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பிரதேச பவர் ஜெனரேட்டிங் கம்பெனி லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர்.பி.அகர்வால் கூறியதாவது : இறக்குமதி செய்யப்பட உள்ள நிலக்கரி, குஜராத்திற்கு வந்து பின் மத்தியப் பிரதேசம் வர உள்ளதாகவும், அதானி எண்டர்பிரைசஸ் மூலம் நிலக்கரியை வாங்கியுள்ளதாகவும், இந்த நிலக்கரி பெடுல் மாவட்டத்தில் உள்ள சாத்பூரா தெர்மல் பவர் ஸ்டேஷனில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஆண்டிற்கு 20 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply