சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான ‘ரேண்டம் எண்’, வெளியிடப்பட்டுள்ளது.
ஒற்றை சாளர முறையில், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர, இந்த ஆண்டு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 560 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு ஜூன் 28ம் தேதி கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இன்று ‘ரேண்டம் எண்’ வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் 18ம் தேதி, ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ள: http://www.annauniv.edu/tnea2010/random.html
Leave a Reply