சிவகங்கை: இக்கல்வி ஆண்டு முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறைத் தேர்வு (பிராக்டிகல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவு:
வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி வழங்கப்படும். ஆசிரியர்கள் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்தி, எளிய முறையில் கற்பிக்க வேண்டும். பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இருப்பதால், வகுப்பு எடுக்கத் தேவையில்லை. கட்டாயம் ஒரு வாரத்தில் 10 பாட வேளைகள் எடுக்க வேண்டும். இதற்கான, அறிக்கை தயாரித்து இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும்.
செய்முறை தேர்வு: இக்கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடத்தப்படும். இதன்படி, அறிவியல் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படும். செய்முறைத் தேர்வு நடத்துவது குறித்து பயிற்சியில் விளக்கப்படும். இவ்வாறு பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
Leave a Reply