சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார்பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.
மேலும், இரு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணாபல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: சென்னை அண்ணாபல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 66தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள்இல்லாதது தெரியவந்தது. அக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.கல்லூரிகள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், 66 கல்லூரிகளிலும் மறுஆய்வு நடத்தப்பட்டது. இதில்குறைபாடுகளை சரிசெய்ததால், 63 கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. அடிப்படை வசதிகள் இல்லாத மூன்றுகல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோயம்பேட்டைச் சேர்ந்த ஜே.ஏ., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டுடெக்னாலஜியில் சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.இ.இ., -இ.சி.இ.,-மெக்கானிக்கல் ஆகிய ஐந்து பிரிவுகளுக்கும் இணைப்பு வழங்கப்படவில்லை. இக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது.மற்ற இரு கல்லூரிகளில்முதலாம் ஆண்டிற்கானஆசிரியர்கள் எண்ணிக்கை மட்டும் குறைவாக இருந்தது. இதனால், இரு கல்லூரிகளிலும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் இந்த ஆண்டு சேர்க்க வேண்டிய மாணவர் சேர்க்கை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ.,மெக்கானிக்கல் ஆகிய நான்கு பிரிவுகளில் கடந்த ஆண்டு தலா 60 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த நான்கு பிரிவுகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இடங்கள் 30 ஆக குறைக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரியில், கடந்த ஆண்டு சிவில் பிரிவில் 60 இடங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் 90, இ.சி.இ., 120, பயோடெக் 45, எம்.சி.ஏ., 60 இடங்களில்மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இ.சி.இ., 60 இடங்கள், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோடெக், எம்.சி.ஏ., படிப்புகளில் 30 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.மற்ற கல்லூரிகளில் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி கிடைப்பதைப் பொறுத்துமாணவர் சேர்க்கை நடத்தப்படும். கடந்த ஆண்டு நான்கு பொறியியல் கல்லூரிகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியுள்ளது. அக்கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி கிடைப்பது சந்தேகமாக உள்ளது.இவ்வாறு மன்னர் ஜவகர்கூறினார்.
Leave a Reply