சென்னை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு ஜூன் 23, 24, 25ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை செயலர் கணேசன் பிறப்பித்துள்ள உத்தரவு:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. அம்மாநாட்டில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொள்ள வசதியாக, தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கும், வரும் 23, 24, 25ம் தேதி ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை அளிக்க அரசு ஆணையிடுகிறது.
மேலும், கோவை மாவட்டத்தில் மட்டும், கோடைகால விடுமுறைக்கு பின் ஜூன் 16ம் தேதி திறக்கப்படவிருந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அனைத்தும், இம்மாதம் 28ம் தேதி திறக்கப்பட வேண்டும். இவ்வாறு கணேசன் தெரிவித்துள்ளார். அதேபோல், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply