காத்மாண்டு:”நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தேக்க நிலையை போக்குவதற்கு இந்தியா முன்வர வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறியதாவது:நேபாளத்தில் தற்போது பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த பதட்டத்தை போக்கி, அரசியல் தேக்க நிலையை சரி செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். இதற்கு அண்டை நாடான இந்தியா முன்வர வேண்டும்.
வங்கதேசத்தில் நிலையான ஜனநாயக ஆட்சி ஏற்படவும், இலங்கையில் அமைதி மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளவும் இந்தியா பெரும் பங்கு வகித்தது. இதுபோல், ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்றொரு அண்டை நாடான நேபாளத்தின் பிரச்னையை தீர்ப்பதற்கும் இந்தியா உதவ வேண்டும்.ஆசிய பிராந்தியத்தில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பர்ன்ஸ் கூறினார்.
Leave a Reply