பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகை : ஐ.எஸ்.ஐ., புது திட்டம்

posted in: உலகம் | 0

large_16637புதுடில்லி : இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு, மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நாசவேலைகளை நிகழ்த்த இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினரை, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு தூண்டிவிட்டு வருகிறது. நாசவேலைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு, ஐ.எஸ்.ஐ., அமைப்பு, நிதி உதவி, தாக்குதல் திட்டம் குறித்த ஆலோசனைகளை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தாக்குதல் நடத்த வரும்போது, இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்படும் “முஹாஜிர்ஸ்’ என்றழைக்கப்படும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு, பல்வேறு உதவிகளை வழங்க, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே சலுகைகளை, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து, இந்தியாவிற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் முஜாகிதீன் என்றழைக்கப்படுபவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் இறக்கும் பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உதவித்தொகை, குழந்தைகளுக்கு இலவச கல்வி ஆகியவற்றை வழங்க ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கோட்லி என்ற இடத்தில் பயங்கரவாத அமைப்புகளின் ரகசிய கூட்டம், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சையது சலாவூதீன் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் ஐ.எஸ்.ஐ., உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த சலாவுதீன், இந்தியாவில் ஊடுருவும் முயற்சியை அதிகரிக்குமாறு அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் கேட்டுக் கொண்டார். மேலும் தாக்குதலில் உயிரிழக்கும் பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு ஐ.எஸ்.ஐ., நிதி உதவி வழங்க வேண்டுகோள் வைத்தார். இந்த கோரிக்கையின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ., அமைப்பு பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *