பெட்ரோல் விலை உயர்வு: தி.மு.க., முழு அதரவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்துள்ளன என அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது;பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க., ஒவ்வொரு கட்டத்திலும் தனது முழு ஆதரவையும் அளித்தது. தேசியவாத காங்கிரசும் இதேபோல ஆதரவு தெரிவித்தது. மம்தா பானர்ஜி, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். டில்லியில் தான் இருக்கிறார் . ஆனால், பெட்ரோல் விலை உயர்வு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது.

இந்த விலையேற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுதியை ஒருபோதும் பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத் பவார், எக்காரணம் கொண்டும் விலை உயர்வை வாபஸ் பெறக்கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த ஆண்டில் பெட்ரோல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் மொத்த பணவீக்கத்தை 0.9 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்தார். விலை உயர்வை பா.ஜ., மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *