மும்பை : ஊழல் செய்து, “கோடிகளை’ அள்ளுவதில், அரசியல்வாதிகள் மட்டும் தான் சூரர்கள் என, நீங்கள் கருதினால், அந்த கருத்தை உடனே மாற்றுங்கள். அரசு அதிகாரிகள் பலர், “பலே கில்லாடி’களாக உள்ளனர்.
மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தில், உயரமான கட்டடங்களுக்கு, அனுமதியளிக்கும் கமிட்டியில், மூத்த அதிகாரியாக பணிபுரிந்தவர், சைலேஷ் மகிம்துரா. கட்டட அனுமதிக்காக, லஞ்சம் பெற்ற போது, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தானே முனிசிபல் அலுவலகத்தில், இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, சுனில் ஜோஷி, கான்ட்ராக்டர் ஒருவரிடமிருந்து, லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 18 லட்ச ரூபாய் ரொக்க பணம், 17 லட்ச ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள், ஆடம்பர பங்களா, பண்ணை வீடு உள்ளிட்ட பல கோடி மதிப்புடைய, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
புனே பொதுப்பணி துறையில், இன்ஜினியராக இருந்த விக்ரம் ஜாதவ், கான்ராக்டர் ஒருவரிடமிருந்து, ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில், நடத்தப்பட்ட சோதனையில், ரொக்கமாக மட்டும், ஒரு கோடியே 68 லட்சம் ரூபாயும், 11 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு, பொதுப்பணி துறை இன்ஜினியரான மாருதி பால்கர், கான்ராக்டரிடமிருந்து, ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது சிக்கினார். அவரிடமிருந்தும், கோடிக்கணக்கான மதிப்புடைய பணம், தங்கம், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவங்கள் அனைத்தும், மும்பை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மட்டுமே. ஒரு ஆண்டில் மட்டும், இப்பகுதிகளில், 389 அரசு அதிகாரிகள் பிடிபட்டனர். வருவாய் துறையில் மட்டும் 91 பேரும், கல்வித் துறையில், 18 பேரும், சுகாதாரத் துறையில், 13 பேரும் பிடிபட்டுள்ளனர். நாடு முழுவதும், இது போன்று ரெய்டு நடத்தினால், இந்திய பொருளாதாரம் பன்மடங்கு வளரும் வகையில், பண மூட்டைகளை பெறலாமென, வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
uma shakthi
அன்புடையீர்,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தகவலை தங்கள் வலைத்தளத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை
நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).
இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் http://www.tamilsangamamonline.com இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 21 முதல் 23 வரை இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு திருமதி உமா ஷக்தியை 98409 78327 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.