மும்பை : அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா நிறுவனம், அண்மையில் பட்டி ஏக்யூ9 மற்றும் பட்டி ஏக்யூ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது.
பட்டி ஏக்யூ9 இரண்டு சிம், வயர்லெஸ் எப்.எம்., சரவுண்ட் சவுண்ட் கூடிய எம்பி3 பிளேயர், அதற்கான இயக்கத்திற்கு ஒரே கீ, எப்.எம். ரேடியோ, ஐந்து எல்.இ.டி. டார்ச், அதிகப்படுத்தக் கூடிய மெமரி, க்யூ.வி.ஜி.ஏ., 1.8 அங்குல திரை, ஜிமெயில், யாஹூ, லோட்டஸ் நோட்ஸ் போன்ற வற்றை அணுக மோபி.இன், குவெர்ட்டீ கீ போர்டு எனப் பல வகையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதன் விலை ரூ.2,000 மட்டுமே. பட்டி ஏக்யூ9+ போன் மேலே தரப்பட்ட அனைத்து வசதிகளுடன் சற்று அகலமான 2 அங்குல திரை மற்றும் விஜிஏ கேமரா கொண்டுள்ளது. இதன் விலை ரூ.2,500. இவை சிகப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.
Leave a Reply