புதுடில்லி: சட்டபடிப்பு முடித்தவர்கள், வக்கீலாக பதிவு செய்ய, இனி தகுதி தேர்வு எழுத வேண்டும்.
நாடுமுழுவதும் ஆயிரம் சட்ட கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த சட்ட கல்லூரிகள் மூலம், 60 ஆயிரம் பேர், பட்டதாரியாக தேர்வாகின்றனர். சட்டபடிப்பு முடித்தவர்கள், பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்யும் போது, அவர்களின், அடிப்படை சட்ட அறிவை பரிசோதிக்கும் வகையில், இனி தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, பார் கவுன்சில் தலைவரும், சொலிசிட்டர் ஜெனரலுமான, கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது:
வக்கீல் தகுதி தேர்வு, வரும் ஜூலை 15ம் தேதியும், செப்டம்பர் 30ம் தேதியும், நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. தேர்வுக்கு மதிப்பெண்களோ, கிரேடோ கிடையாது.
‘பாஸ்’ அல்லது ‘பெயில்’ அவ்வளவு தான். பெயிலானவர்கள் ஆறு மாதத்திற்குள், மீண்டும் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம், ஆயிரத்து 300 ரூபாய். சட்ட ஆலோசனை நிறுவனமான, ‘ரெயின் மேக்கர்’ இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பார் கவுன்சிலுடன் இணைந்து, செய்து வருகிறது. தேர்வுக்கான பணம் கட்டியவர்களுக்கு, இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்படும். ஒன்பது மொழிகளில், இந்த தகுதி தேர்வு நடத்தப்படும்.
Leave a Reply