சென்னை: முதல்வர் கருணாநிதி நேற்று இரவு, திடீரென அண்ணாதுரை சமாதியில் ஒரு மணி நேரம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய தலைமைச் செயலகத்தின் கட்டடப் பணிகளை நேற்று பார்வையிட்ட முதல்வர் கருணாநிதி, இரவு 7.45 மணியளவில் திடீரென கடற்கரைச் சாலையில் உள்ள அண்ணா துரை சமாதிக்குச் சென்றார். இரவு 8.45 மணி வரை அங்கே யே இருந்தார். அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமியும், பொன்முடியும் இருந்தனர்.”தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது’ என, கர்நாடகா அரசு நேற்று இரவு அறிவித்திருந்த நிலையில், அண்ணாதுரை சமாதிக்கு, முதல்வர் சென்றது பரபரப் புக்கு காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால், “சமாதியில் உள்ள அணையா விளக்கின் பராமரிப்புப் பணி நடக்கிறது; அதைப் பார்வையிட்டு, கடற்கரையில் கொஞ்சம் காற்று வாங்கி வரலாம் என்பதற்காகச் சென்றார்’ என, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஆண்டு ஏப்., 27ல் , இலங்கை போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, இதே அண்ணா துரைசமாதியில் தான் முதல்வர் கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற் கொண்டார். நேற்று இரவும் அவர் அண்ணாதுரை சமாதிக்குச் சென்றதால், அரசியல் மற்றும் பத்திரிகை வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply